Tuesday, June 1, 2010

தனி(ன்)மை


என் தனிமையை
தாழிட்டு வைக்கிறேன்
வேறு யாரும் அங்கு வந்துவிட
க் கூடாதென்றும்
என்னை தனியேவிட்டு அதுபோகக் கூடாதென்றும்

என் சொல்படி
எனக்கு சுகம் தருவதை
செய்து பார்க்கிறேன்

யாருக்கும்
உலக சம்பிராதயங்களுக்கும்
பொய்யாய் வேஷமிட வேண்டியதில்லை

அந்தரங்கப் பகுதிகளை
தொடுகிறேன்
அவனை நினைத்து

அவன் தீண்டலாய்
எழும்புகிறது பூட்டி வைக்காத
புலன்கள்

என்னாசை நிர்வாணமாய்
நிற்கிறது
உடைகளை தேடி

அம்மணம் அழகு
என்மனம் சொல்கிறது
விரித்திருக்கும் கண்களுக்கு

உற்றுப் பார்க்கிறேன்
கிளர்ச்சியின் ஊற்று
சுரக்கும் இடங்களை

உணர்வை ஊசலாடவைத்து
ஒதுங்கி நிற்கிறது
இப்பொழுது உதவாத
முன்பு பதிந்திருந்த
தவறென்ற வரையறை

உணர்ச்சி குளிர்தேடுகிறது
உடல் வெப்பத்தை
சமன் செய்ய

உஷ்ணம் குறைந்த நேரம்
உள்ளுக்குள் கேவலமாய் திட்டுகிறது
செய்கையின் தரத்தை சொல்லி
அதுவரை மறைந்திருந்த
உணர்ச்சி குவியலில் மூழ்கியிருந்த
சுயஒழுக்கம்

"மிதந்து

நிமிர்ந்து
விழுந்த
பின்புதான் போதை தெளிந்தாய்" என
புத்தி சொன்னது

ஆடையிடுகிறேன் அங்கம்
அசிங்கமாய் தெரிகிறது
இதற்காகவா
எல்லாம் செய்தேனென்று
புலம்பிக் கொண்டிருக்கிறேன்...

No comments:

Post a Comment