Monday, May 31, 2010

புணர்வின் உச்சத்தில்


புறமண்டையில் தட்டுகிறான்
புணர்வின் உச்சத்தில்
அவளின் புருஷனா
தந்தையா
சகோதரனா
குழந்தையா
ஓடிய ஆறு உறைந்தது
பனிக்கட்டியாய்

நிறுத்திவிட்டு
திரும்பி பார்கிறேன்
அச்சத்தின் குரல்
அறைந்து சென்றது
வேகமாய் காற்றில் திறந்த
ஜன்னல் கதவாய்

தொடரத்தான் வேண்டியிருந்தது
விட்ட இடத்திலிருந்து
முடிக்க

இயல்பிழந்த நிலை


இயல்பிழந்த நிலையில்
இருக்கிறேன்
உன்னோடு
என்னை சேர்த்த காதலால்
-------
இயல்பிழந்த நிலையில்
இருக்கிறேன்
நடிக்க வேண்டிதானிருக்கிறது
அம்மாவின் பாசத்திலிருந்து
நண்பர்களின் ஆறுதலிருந்து
மற்றவர்களின் அனுதாபத்திலிருந்து
அவளின் ஏளன பார்வையிலிருந்து
மறைவாய் அழுதுதீர்த்த கண்ணீரிலிருந்து
நம்பிக்கை துரோகிகளின் போலிசிரிப்பிலிருந்து
ஊருக்கு பேசிவிட்டு உண்மையில் நடக்காத
உபதேசவான்களின் அறிவுரையிலிருந்து
தப்பிக்க

எப்பொழுதும் போலவே
சிரிக்கிறேன்
பேசுகிறேன்
எல்லாமும் செய்கிறேன்
கண்களை வற்ற செய்து

Saturday, May 29, 2010

உண்மை சொன்னால் நேசிப்பாயா!?


நவீன விபச்சாரிகளுக்கு
காதலிக்க ஒருவன்
காமம் செய்ய ஒருவன்
கல்யாணத்திற்கு ஒருவன்
நான் காதல் செய்தவன்
ஒரு சுடிதார் விபச்சாரியை

ஆகவே
நன்றாக தொழில்கற்ற விபச்சாரி
யாரேனும் இருந்தால்
என்னை காதல் செய்யுங்கள்

நான் உங்களால்
காதலிக்கப் படுவதையே
விரும்புகிறேன்

என்னிடம் பணமில்லை
ஆனால்
மற்ற ஆண்களால்
உங்களுக்கு மறுக்கப்பட்டதை
நான் நிச்சயம் தருவேன்
அதை மட்டும்
நான் என் காதலுக்குரிய
தகுதியாக நினைக்கிறன்...

Tuesday, May 25, 2010

செர்ரி பழம்


செர்ரி பழத்தை
வெயிலில் வாட விடலாமா என்றேன்
எச்சில் தொட்டு
நாக்கால் ஈரம் செய்கிறாள்

செர்ரி பழத்தை
தடவுகிறது
உருகிய சிவப்பு சாக்லெட்
-------
செர்ரி பழத்தை சாப்பிடுகிறாள்
குழம்பிப் போகிறது நாக்கு
வித்யாசம் தெரியவில்லை
அவள் உதட்டிற்கும் பழத்திற்கும்

பற்கள் கடிக்கிறது
நாக்கையும் சேர்த்து
ஸ்ஆ......
-------
அவள் உதடுகடிக்கும்
நேரம்
செர்ரி கோவத்தில் சிவக்கிறது மேலும்
பொறாமையால்
-------
உலர்ந்த திராட்சை
உன் உதட்டு
தோல் சுருக்கம்

Thursday, May 20, 2010

சிறகொடிந்த மனது


பட்டாம் பூச்சி செடியின்
கீழ் நில்
நான் ரோஜா மரத்தின் கிளையோடு
வருகிறேன் என்றான்
காத்துக் கொண்டிருக்கிறேன்
இன்னமும் வரவில்லை

நிழல் தந்த வண்ணத்துப்பூச்சி எல்லாம்
என்னைவிட்டு பறந்துபோகிறது
அவன்போன திசைபக்கமாக

இந்த வருடம் அவன்வர
வாய்ப்பிருக்கிறது
இந்நேரம் அந்தச்செடி மரமாய்
வளர்ந்திருக்கும்