
புறமண்டையில் தட்டுகிறான்
புணர்வின் உச்சத்தில்
அவளின் புருஷனா
தந்தையா
சகோதரனா
குழந்தையா
ஓடிய ஆறு உறைந்தது
பனிக்கட்டியாய்
நிறுத்திவிட்டு
திரும்பி பார்கிறேன்
அச்சத்தின் குரல்
அறைந்து சென்றது
வேகமாய் காற்றில் திறந்த
ஜன்னல் கதவாய்
தொடரத்தான் வேண்டியிருந்தது
விட்ட இடத்திலிருந்து
முடிக்க
No comments:
Post a Comment